ஈரோடு மாவட்டத்தில் 400 க்கு மேற்பட்ட மாட்டு வண்டிகள் இருந்து வரும் நிலையில் நகர மேம்பாட்டின் காரணமாக மாட்டு வண்டிகளை மோட்டார் வாகனமாக மாற்றிக் கொள்ள மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது.
அவ்வாறு மாட்டுவண்டியில் இருந்து மோட்டார் வாகனத்துக்கு மாற்றிக் கொள்வதாக இருந்தால் தாங்களே சரக்குகளை ஏற்றி இறக்கி கொள்வதற்கு வண்டி ஓட்டுனர்கள் அனுமதி கோரியிருந்தனர்.
இதற்கு கோட்டாட்சியர் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படும் நிலையில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாட்டு வண்டியில் இருந்து மோட்டார் வாகனத்துக்கு ஒருவர் சரக்கை மாற்றிக் கொண்டிருக்கும்போது சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் இருதரப்புக்கும் இடையே கைகலப்பில் முடிந்தது.